பக்கம்:தெய்வ மலர்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15

இன்னும் அதிகமாகக் கிடைக்கவில்லையே என்பது தான் அந்த வருத்தம். போதும் என்ற மனம் குரங்குக்கு இல்லை. அதிக ஆசை வந்து விட்டது. அதிக ஆசை அதிக நஷ்டம் என்பார்கள். அது மட்டுமல்ல. அதிகக் கஷ்டமும் தான்.

ஒரு வீட்டில் ஒரு குழந்தைக்குப் பிறந்த நாள் விழா. அந்த வீட்டில் அதிகமாக லட்டு செய்தார்கள். ஆளுக்கு ஒன்ருகக் கொடுத்தார்கள். குரங்குக்கும் ஒன்று தான். லட்டு தின்ற குரங்குக்கு, இன்னும் சாப்பிட வேண்டும் போல் இருந்தது. ஆல்ை யார் கொடுப்பார்! வீட்டுக்காரரிடம் கேட்க வெட்கம். பூனையிடம் கேட்கப் பயம். குரங்குக்கு ஒரே கவலை.

வீட்டுக்காரர்கள் எல்லோரும் வெளியே நின்று பேசிக் கொண்டிருந்தபோது, குரங்கு நைசாக உள்ளே புகுந்தது. இரண்டு லட்டை எடுத்துக் கொண்டு, பின்புற வழியாகப் போய் ஒரு மரத்தில் ஏறி மறைந்து கொண்டு, ஆசை தீரத் தின்றது.

இப்படியாக குரங்கு ஒவ்வொரு வீட்டிலும் புகுந்து, ஆசையான தின்பண்டங்களைத் திருடிக் கொண்டு, மரத்தில் ஏறித் தின்பது வழக்கமாகப் போய் விட்டது.

ஒவ்வொரு வீட்டிலும் தின்பண்டங்கள் திருட்டுப் போவது அதிகமாகப் போயிற்று. முதலில் குழந்தைகள் மீது சந்தேகப் பட்டார்கள். அவர்கள் இல்லையென்றதும், பூனை மேல் சந்தேகப்பட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெய்வ_மலர்.pdf/17&oldid=580290" இலிருந்து மீள்விக்கப்பட்டது