பக்கம்:தெய்வ மலர்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21

தெரியவில்லை என்று எல்லா எலிகளும் ராஜாவிடம் அழாத குறையாகக் கூறின.

'உங்களுக்கு மூளையே கிடையாது என்று எனக்கு நன்ருகத் தெரியும். நல்ல நல்ல யோனைகளை உங்க குளுக்கு சொல்லித் தருகிறேன். என்கூட எல்லோரும் வாருங்கள்’ என்று ராஜா எலி அழைத்தது.

ராஜா எலி எல்லோரையும் வேலை வாங்கி ஏமாற்றி சாப்பிட்டு வந்ததால், நிறைய கொழுப்பேறி இருந்தது. தன் உடலைத் துாக்கி நடக்க முடியாமல் நெளித்து நெளித்து நடந்தது. அது போகின்ற அழகைப் பார்த்து, வாய்க்குள்ளே சிரித்துக் கொண்டே மற்ற எலிகள், பின்தொடர்ந்து போயின.

கொஞ்ச தூரத்தில், அங்கே ஒரு பெரிய ஆலமரம் இருந்தது. அதுதான் நமது பயிற்சி மைதானம்’ என்று கூறியபடி நெட்டைவால் எலி எல்லோரையும் சுற்றும்முற்றும் பார்த்தது.

எல்லோரும் வரிசையாக நில்லுங்கள்’ என்று

சத்தம் போட்டது. பயந்து கொண்டே மற்ற எலிகள் வந்து வரிசையாக நின்றன.

உங்களுக்கெல்லாம் அறிவே கிடையாது. நான்தான் தப்பித்துக் கொள்ளும் தந்திரங்களை யெல்லாம் அறிந்தவன். சாமர்த்தியம் இருப்பதால் தான், நான் உங்களுக்கு எல்லாம் ராஜாவாக

தெய்-2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெய்வ_மலர்.pdf/23&oldid=580296" இலிருந்து மீள்விக்கப்பட்டது