பக்கம்:தெய்வ மலர்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

கொட்டை, பசும்புல்தான் எனக்குத் தீவ னம். நான் படுத்துக்கொள்ள தனியாகக் கொட்டகை, எல்லா வசதிகளுடன் நானும் வாழ்ந்து வந்தேன். பத்து வருடங்கள் ஆகிவிட்டன நான் வந்து. -

ஒருநாள் காலையில் நான் ஏதோ சத்தம் கேட்டு எட்டிப் பார்த்தேன். கழுத்தில் சலங்கை கட்டிக் கொண்டு ஒரு காளைமாடு வந்து வீட்டு வாசலில் நிற்கிறது. என் எஜமானன் முகத்தில் புன்சிரிப்பு. விட்டிலுள்ள குழந்தைகள் எல்லோரும் கைகொட்டி வரவேற்கிருர்கள்.

என் முதலாளி சொல்கிருர். நந்திக்கு வயதாகி விட்டது. உடம்பில் சக்தியில்லை. அவனை விற்று விடவேண்டும். இனிமேல் இந்தக் காளையைத்தான் வைத்துக்கொள்ளப் போகிறேன்.'

எனக்கு ஒரே வருத்தமாகப் போய்விட்டது. இத்தனை காலமாக அவர்கள் கூடவே இருந்து வாழ்ந்தேன். இப்பொழுது எப்படிப் பிரிந்து போவது? எனக்கு முதலாளிமீது கோபங் கோபமாக வந்தது. ஆலுைம் நான் பொறுத்துக் கொண்டேன்.

எனக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்துவிட்டதால், நன்ருக யோசித்துப் பார்க்க முடியவில்லை. எனக்கு சக்தி இருக்கிறது. வயதாகவில்லை’ என்று நிரூபித்து காட்டி விடவேண்டும்'. இது தான் எனக்குத் தெரிந்த வழி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெய்வ_மலர்.pdf/28&oldid=580301" இலிருந்து மீள்விக்கப்பட்டது