பக்கம்:தெய்வ மலர்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

"நான்தான் பலசாலி” என்பதை எப்படியாவது

முதலாளிக்குக் காட்டிவிட்டால், புதிய மாட்டை விற்றுவிடுவார். என்னையே வேலைக்கு வைத்துக்

கொள்வார் என்று நம்பினேன். புதிய மாட்டின்

மேலே எனக்கு கோபம் கோபமாக வந்தது. 'அதற்கு ஒரு புது கொட்டகை வேண்டுமா?கூடாது." என்று நானே முடிவு செய்தேன்.

கொட்டகைக்கு செங்கல்லால் பாதிசுவர் கட்டி இருந்தார்கள். அதை முட்டித் தள்ளிவிட்டால், அப்புறம் எப்படி கொட்டகை போட முடியும்? அதல்ை என் பலத்தை நம்பினேன். எனக்குதான் ஆத்திரமும் கோபமும் நிறைய இருக்கிறதே!

ஒரே முட்டுதான்! சுவர் இடிந்து விழும்.

நான்கு சுவருக்குக் நான்கு இடி. அப்புறம் தரை மட்டம்தான் என்று முடிவு கட்டினேன்.

முதன் முதலில் வேகமாக ஒடி ஒருபக்கத்து

சுவரை இடித்தேன். ஈர சுவராக இருந்ததோ என்னவோ தெரியவில்லை. பொத்தென்று கீழே விழுந்தது. எனக்கு சந்தோஷம் தாங்க முடிய

வில்லை, ஆலுைம் தலை கிண் ைெ:ன்று இருந்தது. தலையில் வலி இருந்தாலும், இடித்துத் தள்ள வேண்டும் என்ற கோபம்.

அடுத்தபக்கத்து சுவரை ஓடிப்போய் இடித்தேன்.

சுவர் ஆடியது. ஆல்ை விழவில்லை. தலையில் ஈரம் கசிவது போல இருந்தது. என் கோபத்தில் அதை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெய்வ_மலர்.pdf/30&oldid=580303" இலிருந்து மீள்விக்கப்பட்டது