பக்கம்:தெய்வ மலர்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 49

நடக்கும் என்று அவன் பேசியது கேட்க பயங்கரமாக இருந்தது.

வடிவேலனும் சிரித்தார். நாராயணனும் சிரித்தார். அவர்களுக்கு இப்பொழுது தான் மனம் குளிர்ந்தது.

அவர்கள் போனதும் கதுப்பு தாய் அந்தப் புதரை == விட்டு வெளியே வந்தது.

ஆள் தெரியாமல் போய் கடித்து விட்டாயே! உன்னை அறுத்தே போட்டிருப்பானே! நல்ல வேளை பிழைத்துக்கொண்டாய் என்று கறுப்புநாய் கூறியது.

இப்படி நடக்கும் என்று தெரியாமல் போய்விட் டதே! இனி நான் என்ன செய்வேன் என்று அழுதது

தெருநாய்.

செய்த தவறுக்கு தண்டனை கிஉைத்து விட்டது. இனிமேலாவது ஒழுங்காக இரு. உன்னுடன் இருந் தால் என்னையு . அடிப்பார்கள். இருந்தாலும், ஆபத்து நேரத்தில் காப்பதுதானேநண்பனின் வேலை! வா. ஆஸ்பத்திரிக்குப் போகலாம்’ என்று கறுப்பு நாய் அதனே அழைத்தது. ஏமாற்றிப் பிழைப்பவர்கள் எல்லாம் கடைசியில் இப்படித்தான் ஆவார்கள் என்றது கறுப்பு நாய்.

இனிமேல் ஒழுங்காக இருப்பேன்’ என்று கால்களை இழுத்துக் கொண்டே தெரு நாய் நடந்து சென்றது பார்க்கப் பரிதாபமாக இருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெய்வ_மலர்.pdf/51&oldid=580324" இலிருந்து மீள்விக்கப்பட்டது