பக்கம்:தெரிந்தால் சமயத்தில் உதவும்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

12 தூரத்தை உடைய இடம் அதே பெயரால் அழைக்கப்பட்டும் மாறி மருவி, ஸ்டேடியம் என்ற பெயரைப் பெற்று விட்டது 3 12) குத்துச் சண்டை போட்டியானது, முதன் முதலாக கி.மு. 686ம் ஆண்டில், கிரேக்கர்களால் நடத்தப் பெற்ற ஒலிம்பிக் பந்தயங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது.

13) கிரிக்கெட் ஆட்டத்தில் பந்தடித்தாடும் விதத்தில் (Batting) புதுமையையும் பிறர் வியக்கும் வண்ணம் மறு மலர்ச்சியையும் புகுத்தி ஆடி, பந்தடித்தாடும் திறமையால் மட்டுமல்லாது, கிரிக்கெட் ஆட்டத்திற்கும் நல்ல புகழையும் சேர்த்துத் தந்த பெருமையை, வரலாற்றிலே பொருத்திச் சேர்த்த W. G. கிரேஸ் என்பவர். சிறந்த கிரிக்கெட் ஆட்டக் காரர் என்று புகழப்பட்ட ..கிரேஸ்,தொழிலில் நல்ல டாக்டராக விளங்கியவர். 14) கால் பந்தாட்டத்திலே. இந்தியா சிறந்து விளங்கிய காலமும் இருந்திருக்கிறது. 1956ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் பந்தயத்தில்,கால் பந்தாட்டப் போட்டியில் இந்தியக் குழு கலந்து கொண்டு, அரை இறுதிப் போட்டி (Semi Finals) வரை வந்து, நான்காவது இடத்தையும் பெற்றது என்பதைப் பார்க்கும் பொழுது மனதுக்கு சற்று தெம்பாக இருக்கிறது.

15) தற்போது, விளையாடப்படும் நவீன வளைகோல் பந்தாட்டம் (Modern Hockey) பிறந்த இடம் இங்கிலாந்து என்று வரலாற்றாசிரியர்களால் குறிக்கப்பட்டிருக்கிறது.