பக்கம்:தெரிந்தால் சமயத்தில் உதவும்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

முன்னுரை 'தெரிந்தால் சமயத்தில் உதவும்' என்று இந்த நூலுக்குப் பெயர் சூட்டியிருக்கிறேன். விளையாட்டு என்பது யாரும் கலந்து காள்ளலாம் எஎன்கிற சிறப்பான பெருமையை உடையது. மனம் விரும்பி ஈடுபடுகின்ற அனைவரும். மணமார்ந்த மகிழ்ச்சியில் திளைக்கின்றார்கள், மேம்பாடு அடைகின்றார்கள் என்பது நாம் அனை வரும் காண்கின்ற உண்மை நிகழ்ச்சியாகும். ஆனால், விளையாட்டு என்பது விலங்குகள் அலைவது போன்ற செயல் முறைகள் அல்ல என்பதைத் தான், இதில் எங்கு பெறுபவர்களும், பார்வையாளர்களாகிய பொதுமக்களும் உணர்ந்து கொள்ள மறுக்கின்றார்கள். பல விஞ்ஞானக் கூறுகளின் சிறந்த தொகுப்பு தான் விளையாட்டுக்கள் என்ற உண்மை வெளியாகி எத்தனையோ ஆண்டுகள் ஆகிவிட்டன. என்றாலும் நமது மக்கள் விளையாட்டு என்பது வீணாக நேரத்தைக் கழிக்கும் ஒரு திமிரான செயல் என்றும், து நம் நாட்டுக்குத் தேவை யற்றது என்கிற பொய்யான வாதத்தைக் கட்டிப் பிடித்துக் கொண்டு புலம்பி மகிழ்கின்ற நடைமுறை செயல்களில் தான் டுபட்டுக் கொண்டு வருகிறார்கள். பொது மக்களை வழிநடத்தும் பிரதிநிதிகள் கூட இந்தக் கருத்திலே புரண்டு கொண்டிருப்பதால் தான், நமது நாட்டில் விளையாட்டுத்துறை இன்னும் வளர்ச்சி பெறாத ஊன நிலையில் உழன்று கொண்டிருக்கிறது.