பக்கம்:தெற்கு ஜன்னலும் நானும்-மரபு மற்றும் புதுக்கவிதைகள்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 தெற்கு ஜன்னலும் நானும் என் இரவு... புதுக்கனவு சிலிர்க்கவரும் பூந்துயிலின் ஒரம் மதுக்கலசம் நுழையவரும் வண்டெனவே சுழன்று உயரத்தில் உள்மனத்துப் பறந்தலையும் உன்மத்துப் பண்ணில் துயரமெல்லாம் தூளாக்கத் துள்ளிவரும் கவிதை! சுற்றிவரும் வெற்றுலகம் தொல்லைதர வில்லை! முற்றிவரும் தவத்தமிழின் முதியசுவை யன்றி! பித்துமணம், பிஞ்சுமணம்; பேதைமணம்இல்லை! கொத்துமணம்; கொக்குமனம்; குரங்குமனம் இல்லை! சத்திரத்தில் தங்கவரும் தரித்திரனைப் போல நித்திரைக்குள் நிழலிட்டே நீங்கிவிடும் நினைவைக்