பக்கம்:தெற்கு ஜன்னலும் நானும்-மரபு மற்றும் புதுக்கவிதைகள்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 தெற்கு ஜன்னலும் நானும் தோள்களில் புரளும் மாலை; சூழ்ந்திடும் காக்காய்க் கூச்சல் ஆள்க்கட்டு மட்டும் வைத்தே ஆற்றலை அளப்போர் எல்லாம் தாள்பிடிக்கும் கும்ப லாவார்! தரமான விமர்சனத்தில் தேள்க்கொட்டும் இருக்க வேண்டும்! தேன் சொட்டும் இனிக்க வேண்டும்! “தரம், குறை ஆயும் ஆய்வுத் தன்மைதான் என்பால் இன்றேல் வெறும்பாழே நான்தான்!” என்றே விளம்புமோர் 'ஓதல் லோ வின் குரலினில் தன்னை வைத்தே, குணம்குறை காணும் களையின் உரத்தினை, தேவை தன்னை உணர்த்தினான் ஷேக்ஸ்பியர்தான் நெய்யூற்றி விருந்து வைத்தார்; நெருங்கியவர் என்பதற்காய் பொய்சூட்டி விமர்சனத்தைப் புகழ்வர்ண விளம்பரத்தின் தொய்நிலைக்கே இறங்கி வைத்தல் துரோகமே அன்றோ? - பணியைச் செய்கின்ற விமர்சக னுக்கே & செவியில்லை; விழியு மில்லை! O