பக்கம்:தெற்கு ஜன்னலும் நானும்-மரபு மற்றும் புதுக்கவிதைகள்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒரு அறிவிப்பு

என்
வாழ்வுப் பெருவெளியின் 
முக்கால் பங்கு விஸ்தீரணத்தை     
துரோகிகளின் கூடாரங்களே 
அடைத்துக் கொண்டு விட்டன.
மீதி கால்வாசிப் பரப்பில் 
பேதமையின் குடியிருப்பு   
அசடுகளின் ஆக்ரமிப்பு 
சுய ஆராதனையின் 
சூடத் தட்டுகள்
இருப்பினும் 
நான் இருக்கிறேன் - 
ஒரு மூலையில் 
ஒண்டிக் கொண்டு.
ஒரு 
ராட்சச வெளிச்சம் 
வழியும் 
விடியல் தரிசனம் 
வேண்டி
என் 
எதிர்கால இமைகள் 
விழித்துக் கொண்டிருக்கின்றன...