பக்கம்:தெற்கு ஜன்னலும் நானும்-மரபு மற்றும் புதுக்கவிதைகள்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வயலூர் சண்முகம் 51 ஒரு பகலின் ஓரங்கள். பெரிய குளத்தடி குட்டிச் சந்தைக்கு கிழக்குக் கடலோர கூடை மீன்கள் அக்ரஹாரம் வழியே இறுதி ஊர்வலம்... வட்டா டம்ளர் மேடைகளில் வெள்ளையம்மாள்களுக்கும் கருப்பர்களுக்கும் கலப்புத் திருமணம். காவல் போகும் கடமை அவசரத்தில் ஒரு வாலிப வீரரின் மகளிர் கல்லூரியை நோக்கிய மன்மதப் பயணம்.... மேற்கு வெண்மஞ்சளின் மெல்லியப் பின்னணியில் விண்நீல விரிப்பில் சிறகடிக்கும் ஓவியங்களாய் நாரைக் கூட்டம்.