பக்கம்:தெற்கு ஜன்னலும் நானும்-மரபு மற்றும் புதுக்கவிதைகள்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 2 தெற்கு ஜன்னலும் நானும் மறுநாள் நடக்கவிருக்கும் உள்அவைத் தேர்தலில் தானே முடி சூட முன்னாள் எம்.எல்.ஏ. கண்ணாயிரத்தின் தங்கமாரியம்மன் கோயில் சிறப்பு அர்ச்சனை... தெற்குத் தெரு மாப்பிள்ளை வீட்டில் காலை நடந்த கல்யாணத்துக்கு வடக்குத் தெரு பெண் வீட்டில் மாலையில் நடக்கும் வரவேற்பு வைபவம். மணமகள் வாசல்படியில் வலதுகால் வைக்க ஸ்பீக்கரில் ஒலிக்கும் கண்ணிலே நீரெதற்கு காலமெல்லாம் அழுவதற்கு. சூரியக் கைதி மேற்குச் சிறையில் சரணடைகிறான்... வானக் கன்னியின் வெளிச்ச ஆடைகள் கொஞ்சம் கொஞ்சமாய் விலகஅவள் இருட்டு நிர்வாணத்தின் தேகப் பரப்பெங்கும் முளைக்கும் மச்ச நட்சத்திரங்கள். 敬