பக்கம்:தெற்கு ஜன்னலும் நானும்-மரபு மற்றும் புதுக்கவிதைகள்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 தெற்கு ஜன்னலும் நானும் உனது ஓய்வகங்கள் சிந்திக்கும் ஆற்றல் பெற்ற மனிதர்களின் பாழ் வயிறுகள். நீ எல்லை மீறும்போது அறிவே விஷமாகிறது. பாவங்கள் கிளைத்துப் படர்கின்றன. தர்மமும் நீதியும் தலை குனிகின்றன. பிரபஞ்ச மூளையில் புற்று நோயாய் புரையோடிப் போயிருக்கும் ராட்சச பிரச்னையின் பிறிதோர் பெயரே நீதான் பசியே! நீதிக்கு மீண்டும் முதுகெலும்பு வாய்க்குமா? தர்மத்தின் குரலில் மின்சாரம் தொனிக்குமா? தெரு மனிதனுக்கு நிதிப் பேரரசி கை கொடுப்பாளா?