பக்கம்:தெற்கு ஜன்னலும் நானும்-மரபு மற்றும் புதுக்கவிதைகள்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 தெற்கு ஜன்னலும் நானும் எதுவோ? இதயத்தின் புல்லரிப்பை இன்பத்தின் போதைதன்னை அதிசய வியப்பைஎல்லாம் அளிப்பதுவும் எதுவோ? எதுவோ?? உதிர்சருகு பழுப்பினுடே ஒடிவந்தே உறவுபேசி சதிராடிச் சரசம்செய்யும் தண்ணிளம் தென்றல்காற்றா? - கண்ணே! தமிழ்தரும் தேனின்ஊற்றா? கனவுக்குள் கனவதாகக் கண்பசிக்கே அழகையூட்டி நனவுக்கும் மயக்கமீந்தே நகைப்பதுவும் எதுவோ? எதுவோ?? முள்வீட்டுக் குள்ளிருந்தே மோகனச் சிரிப்புதிர்த்தே கள்ஈட்டும் வண்டினத்தின் காதலால் கிளுகிளுக்கும் கவின்மேனி ரோஜாப்பூவா? - கண்ணே காந்தவெண் நிலவுத்தட்டா? 鲁·