பக்கம்:தெற்கு ஜன்னலும் நானும்-மரபு மற்றும் புதுக்கவிதைகள்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வயலூர் சண்முகம் 87 பிறையே பிறையே 'பிறையே: பிறையே: ஒரு சேதி பேச விழைகிறேன் உன்னிடத்தே! சிறியேன் என்றே எள்ளாமல், செவியில் என்மொழி கொள்வாயோ?” 'பிள்ளாய்! பிள்ளாய்! சொல்வாய், நீ! பெரியவன் சிறியவன் என்பது தான் உள்ளம் என்பதைப் பொறுத்ததுவாம்!! உருவம் என்பதோ அடுத்ததுதான்!” "நிலவுப் பிஞ்சே! நீயும் தான் நிதமும் வளர்ந்து மாறாமல், இலகிடும் இந்த உருவோடே என்றும் இருந்தால் அழகன்றோ?" “ஆசைக் குழந்தாய்! உன் கேள்வி: அதிசய அறிவின் முதற் கேள்வி! துசாய், இருளாய் இருந்தாலும் துளியும் வளர்தல் வேண்டுமடா! “வளர்ச்சி” என்பதே வாழ்வாகும்! வாழ்வின் கதையே அதுவாகும் “தளர்ச்சி' என்பதும் ஒரு வகையில் ‘சாவாம் வாழ்வின் முளைகளடா!'