பக்கம்:தெற்கு ஜன்னலும் நானும்-மரபு மற்றும் புதுக்கவிதைகள்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 தெற்கு ஜன்னலும் நானும் ஈனமதிக் குறும்பர்களின் இறுமாப்பை நொறுக்குதற்கே வானமதிர் இடிக்குரலில் வாடாமல் கவிபாடு: இல்லாமை போக்கிடவும் இருநிதியம் சிலர்பாலே நில்லாமை ஆக்கிடவும் நீள்புவியில் தமிழ்ச்சேய்கள் நல்லாண்மை வலிவுற்றே நாடோறும் மேலோங்கி வல்லாராய் நல்லாராய் வாழ்ந்திடவே கவிபாடு! கல்தோன்றா மண்தோன்றாக் காலத்தின் முன்தோன்றி நெல்தோன்றும் கனிதோன்றும் நீர்நிலத்தின் பரப்புனைத்தின் - இல்தோன்றும் அமுதாக இன்றுவரை, இனிஎன்றும் புல்தோன்றும் பூஇளமை பொலிவுடையோன் புகழ்பாடு! O