பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கயிலாசநாதர் கோயில் 89 நரசிம்மவர்மன் காலத்தில் எங்கள் தலைநகரத்தின் மேல் படையெடுத்துவந்தார்களே, வீராதி வீரனும் ஹர்ஷ சக்ரவர்த்தியை வென்று புறங்கண்டவனுமான எங்கள் பாட்டன் இரண்டாவது புலிகேசியை அல்லவா தோற்கடித்தார்கள். வாதாபியையே வெற்றி கொண்டுவிட்டோம் என்று பறையடித்துக்கொண்ட அந்தப் பல்லவர்கள் எங்கே இப்போது? அமைச்சரே! பல்லவன் எங்கே ஒடி ஒளிந்துகொண்டான் என்ற செய்தி ஏதாகிலும் கிடைத்ததா? காஞ்சி நகரையே சுட்டுப் பொசுக்கிச் சூறையாடச் சொல்லுங்கள். அமைச்சர் : விக்கிரமாதித்ய வேந்தே! இளையவனான பல்லவன் எங்கோ ஒடி ஒளிந்துகொண்டான். குபேரனுடைய நகரம் போன்ற இக் காஞ்சிபுரத்தைச் சளுக்கிய வீரர்கள் முற்றிலும் சூறையாடிவிட்டனர். ஆனால், எல்லையற்ற செல்வத்தை உடையதாக அழகின் உறைவிடமாக நிற்கும் கயிலாசநாதர் கோயிலை. - விக்கிர மறந்தேவிட்டேன். அமைச்சரே! சிற்பக்கலையின் மணிமகுடமான அக் கோயிலை இப்பொழுதே சென்று பார்க்க வேண்டும். (தாமதம்) அமைச்சரே! நம் சளுக்கிய நாடு முழுவதும் தேடினாலும் இத்தகைய ஒர் அழகான கலைக்கோயிலைக் காண முடியாது. கலைகளுக்கெல்லாம் உறைவிடமான இக் கயிலாசநாதர் கோயிலையும் அதனுடைய செல்வத்தையும் நானொன்றும் எடுத்துக் கொள்ளப் போவதில்லை. கயிலைமலை போன்ற இக் கோயிலையும் மலைபோன்ற இச்செல்வத்தையும் இப் பெருமானுக்கே விட்டுவிடுகின்றேன். என் ஆணையைக் கூறும் இக் கவிதையையும் இந்த ராஜசிம்மேஸ்வரத்தில் நம்முடைய கன்னட