பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94. கயிலாசநாதர் கோயில் வாரிருங்குழல் வாள்நெடுங்கண் மலைமகள்மது விம்முகொன்றைத் தாரிருந்தட மார்பு நீங்காத் தையாள்.உல குய்யவைத்த காரிரும்பொழில் கச்சிமூதூர்க் காமக்கோட்டம்,உண் டாகநீர்போய் ஊரிடும்பிச்சை கொள்வதென்னே ஒணகாந்தன் தளியுளிரே

இதன் பிறகு நீண்டகாலம் கயிலாசநாதர் கோயிலின்

நிலைபற்றி ஒன்றும் அறியக்கூடவில்லை. மறுபடியும் விஜயநகர அரசர் காலத்தில்தான் இக் கோயில் பற்றிய செய்திகள் கேட்கப்படுகின்றன. - (காலப்போக்கைக் குறிக்கும் இசை) சக ஆண்டு 1286-ன்மேல் அதாவது கி.பி.1865 விசுவாவசு ஆண்டில் கம்பண உடையார் என்பவர் ஒரு கல்வெட்டுத் தந்துள்ளார். அதன்படி ஒரு புதுமை இக்கோயில்பற்றி நடைபெற்றிருப்பதாகத் தெரி கின்றது. - 'ஸ்வஸ்தியூரீ பூரீமன் மகாமண்டலேஸ்வர அரிராய விபாடன், பாஷைக்குத் தப்புவராயர், கண்டன், பூர்வ சமுத்ராதிபதி ரீ கம்பண உடையார் ப்ரித்விராஜ்யம் பண்ணி அருளாநின்ற சகவருஷம் ஆயிரத்து இருநூற்றி எண்பத்து ஆறின்மேல் செல்லாநின்ற விஸ்வாவசு வருஷத்து ஆடிமாதம் முதல், பூரீமன் கோப்பணங்கன் காஞ்சீபுரத்தில் இராஜசிம்மேஸ்வரமுடையாரான எடுதத்து ஆயிரமுடைய நாயனார் கோயில் தானத்தார்க்கு நிருபம். எடுதத்து ஆயிரமுடைய நாயனார் தானத்தை முன்பே குலோத்துங்க சோழ தேவர் காலத்திலே இறங்கலிட்டு, நாயனார் திருநாமத்துக்காணியும் மாறி திருவிருப்பும் திருமடைவிளாகமும், அநேகதங்காவத