பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கயிலாசநாதர் கோயில் 95 கு முடைய நாயனாருக்குக் கொடுத்த இதுவும் எடுதத்து ஆயிரமுடைய நாயனார் தானத்தை இறங்கல் இட்ட இதுவும் தர்மம் அல்லாதபடியாலே இன்னாயனார். தானம் இறங்கல், மீண்டு ஆடி மாத முதல் பூசை திருப்பணி நடக்கும்படிக்குத் தென்கரை மணவிற் கோட்டத்து பன்மாநாட்டு முருங்கையூர் அடங்கலும் சர்வமான்யம் இறையிலியாக நாற்பாற்கு எல்லை தெரித்துக் கொடுத்தோம். இவை கோப்பணங்கன் எழுத்து. இந்தக் கல்வெட்டு ஒரு புதிய செய்தியை அறிவிக்கின்றதே!

அது என்ன? - : குலோத்துங்கன் என்ற அரசன் இந்தக் கயிலாசநாதர் கோயிலுக்கு உரிய சொத்துகளில் பெரும் பகுதியை சமீபத்தில் உள்ள அநேகதங்காவதமுடையார் கோயிலுக்கு மாற்றிவிட்டார் என்றல்லவா தெரிகின்றது. 1 : அநேகதங்காவதம் பாடல்பெற்ற திருத்தல மாகலானும், அதற்குப் பூசை முட்டுப்படும்படியான

அளவிற்கு வறுமை ஏற்பட்டிருக்கும் ஆகலானும் இவ்வாறு சொத்துகள் மாற்றப்பட்டிருக்கலாம். கு 2 : குலோத்துங்கன் என்றால் எந்தக் குலோத்துங்கன் கு 3 கு 4 என்று தெரிய முடியவில்லையே!

முதற் குலோத்துங்கன் சுங்கந் தவிர்த்த குலோத்துங்க

சோழன் என்று புகழப்படுகிறான். மேலும், அவனுடைய கல்வெட்டு உட்சுற்று சிறு கோயில் சொத்தை மாற்றி இருக்க முடியாது.

இரண்டாம் குலோத்துங்கன் பெரிய புராணம் பாடிய

சேக்கிழாரை அமைச்சராகப் பெற்றவன். அநபாயன்