பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 சேரமான் இரும்பொறை (புலவர் பொய்கையார் அரசவைக்குள் நுழைதல்) செங் வருக வருக, புலவர் மணியே வருக தங்களுக்கு வேண்டிய எல்லா வசதிகளும் ஒழுங்காகக் கிடைக் கின்றனவா? பொய்கையார் : செங்கண் சோழா, என்னென நினைத்துக் கொண்டாய் எம்மை. உனது சிறைக்கூடத்தில் நாம் இருப்பதால் இவ்வாறு கூறினையா? செங் : பொய்கையாரே, யான் கேட்டதில் தவறு ஏதாவது உண்டா? வராத விருந்தினர்கள் வந்தால் அவர்களை நன்கு உபசரிக்கவேண்டாவா? பொய்கை : ஆம், கேட்கமாட்டாயா வராத விருந்தினரைக் கண்டால் சோழன் அவர்களைச் சிறைக் கூடத்தில் வைத்துதான் உபசரிப்பான் என்பதை இப்பொழுது தான் தெரிந்துகொண்டோம். நல்லதாயிற்று. நாளைச் சோழர்கள் சேர நாட்டிற்கு வந்தால் எப்படி உபசரிப்பது என்று தெரிய வேண்டாவா? மந் : அரசே, பார்த்தீர்களா புலவர் மிடுக்கை தமது நிலையை மறந்து வேடிக்கை பேசப் புறப்பட்டு விட்டார். புலவர் சிகாமணியே! சோழர்களை எப்பொழுது உபசரிக்க உத்தேசம்? சோழர் சிறைக் கூடத்திலிருந்து விடுதலை அடைந்த பிறகா இல்லை, அதற்கு முன்னமேயா? செங் அமைச்சரே, பொறும். அவர் நமது கைதி அல்லர். மேலும், அவர் நம்மிடம் எது வேண்டுமானாலும் பேசலாம். புலவர் பெரும, தங்கள் மனத்தில் உள்ளவற்றைக் கூறுங்கள். பொய்கை : அரசே, இந்த மட்டிலுமாவது நீ அறிந்திருப்பது பற்றி யாம் மகிழ்ச்சி அடைகிறோம். சோழனே, நீ ஆள்வது அழியும் மண்ணுலகம், யாம் ஆள்வதோ