பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேரமான் இரும்பொறை 4 103 செங் : அமைச்சரே, நாமே சிறைக்கூடம் சென்று சேரமானின் மனநிலையை அறிந்துவருவோம் வாரும். 職 褒 亨 இடம்: சோழன் சிறைக்கூடம்) (செங்கணான், சேரமான், மந்திரி, சேவகன் முதலியோர்) செங் : சிறைக்காவல உள்ளே சேரமான் என்ன செய்கிறார்? காவ : அரசே! தங்கள் உத்தரவுப்படியே நாங்கள் மிக்க மரியாதையுடன்தான் இருக்கிறோம். ஆனால். செங் : என்ன ஆனால் என்று இழுக்கிறாயே? - சேவ : மகாராஜா அவர்மட்டும் புதிதாகக் கூண்டில் அடை பட்ட புலியைப்போலச் சிறைக்கூடத்தைச் சுற்றிச் சுற்றி வருகிறார். எவரிடமும் பேசாமல், ஆகாரம் எதுவும் இன்றித் தனக்குத்தானே பேசிக் கொண்டிருக் கிறார். . செங் : சரி, காவல! நீ அப்பாற் செல். . (சிறையில் சேரமான் மான உணர்ச்சி வயப்பட்டவனாய் தன்னுடன் புலவர் பொய்கையார் உரையாடுகின்ற பாவனையில் பேசிக் கொண்டிருக்கிறான்) சேரமான் இரும்பொறை : ஆ! புலவர் மணி பொய்கையாரா? இதோ வரவேண்டும் வரவேண்டும். ஐயனே! நம் அரண்மனை ஏதோ புதுமாதிரி மாறிவிட்டதாகத் தெரிகிறதே? . . . . பொய்கை : சேரமானே! கனவு காண்கிறாயா? நன்கு விழித்துப் பார்; இஃது எவ்விடம் என்று தெரியும். தெ.ந.-8