பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 செழியன் துறவு குறுகுறுத்த பார்வையு முடையவர். இளவரசி நல்லினி பதினெட்டு வயதுடையவள்; சிவந்த மேனியள்; இளையவளாயினும் கற்றறிவுடையவள்) இரும்பொறை : அமைச்சரே, கேட்டீரா ஒற்றர் கொண்டு வந்த செய்தியை? நேற்றுப் பிறந்த சிறுவன்! பெயர் தான் நெடுஞ்செழியனே தவிர, ஆண்டாலும் அனுபவத்தாலும் குறுஞ்செழியன்தானே இவன்! என்ன ஆணவம்! என்ன செருக்கு! எத்தனைப் புலவர் இவன் புகழைப் பாடுவது. அப்பப்பா! இன்னும் சிறிது காலம் நாம் சும்மா இருந்தால்...! (பல்லை நறநறவென்று கடிக்கிறான், வி. கோதை : சேரர் தலைவரே, பாண்டியன் நெடுஞ்செழியன் ஒரு பெரிய அரசின் தலைவனல்லவா? பாம்பு சிறியது என்று அதனை மிதிக்கலாமா? உருண்டு செல்லும் பெரிய தேரை விழாமல் காப்பது உருவத்தால் சிறிய கடையாணி அல்லவா? உருவத்தையும் வயதையும்கொண்டா ஒரு மன்னனை மதிப்பிடுவது? உருள்ப்ெருந் தேர்க்கு அச்சாணி அன்னாரை, உருவு கண்டு இகழலாமா? இ. பொ : என்ன வில்லவன்கோதை நீர் அமைச்சர் என்பதால் இப்படிப் பேசுகிறீரா, அல்லது உண்மை யாகவே பாண்டியன் புகழைக் கேட்டு நடுக்கமா? பாம்பாவது, கடையாணியாவது பகையை இளமையிலேயே அழிப்பதை விட்டு விட்டு, அது. பெரியது என்று அஞ்சிக்கொண்டிருப்பதா அழகு? 'இளைதாக முள்மரம் கொல்க" என்று அறநூல் அறைவதை அமைச்சராகிய உமக்கு நான் நினைவூட்டவும் வேண்டுமா? - 1. இளை தாக முள்மரம் கொல்க; களையுநர் கைகொல்லும் காழ்த்த இடத்து. --குறள், 879.