பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செழியன் துறவு 113 உண்டாக்குகிறது! அந்தச் சிறுவனுக்கு நல்ல அறிவு புகட்ட வேண்டும். நீர் என்ன சொல்கிறீர்? கு. கிழார் : அரசே எனக்கு ஒன்றுமே புரியவில்லையே! நாம் ஏன் நெடுஞ்செழியனுக்கு அறிவு புகட்ட வேண்டும்? அதுவும் நெடுஞ்செழியனுக்கா! இ. பொ : என்ன கிழாரே, உமக்கும் நடுக்கம் கண்டு விட்டதா? மூவேந்தர் என்ற பெயர் இல்லாமல் செய்துவிடுகிறேன்!” என்று செழியன் கூறினான் என்று நீர்தானே கூறினர்? அதற்குள் மறந்து விட்டீரா? கு. கிழார் . மறக்கவில்லை அரசே ஆனால், அந்தச் சொற்களுக்கு நீர் இத்தகைய பொருள் செய்து கொண்டு போருக்குப் புறப்படுவதுதான் விளங்க வில்லை. அப்படிக் கூறின பாண்டியன், படை எடுத்து வந்து, தான் சொன்னதை நிலைநாட்ட வேண்டுவது அவன் கடமையல்லவா? நாம் ஏன் இதில் முந்தவேண்டும்? L இ. பொ : அவன் படை சேர்த்து நம்மிடம் வருவதற்குள் நாமே அவனிடம் சென்று அவனை முறியடிப்பது தான் அரசமுறை. x கு. கிழார் : சேர வேந்தரே, நம் ஊரில் யானையாய் உள்ள நாம், அவன் ஊரில் பூனையாகிவிடுவோம். சேற்று நிலத்தில் அகப்பட்டுக் கொண்டால் யானையைக் கூட் நரி வென்றுவிடும்' இந்த உண்மையை மறந்து நாம் ஏன் படைகொண்டு பாண்டி நாடு செல்ல வேண்டும்? வி. கோ : புலவர் பெருமானிர், நீவிர் கூறுவதுதான் உண்மை. நீவிர் வருவதற்குமுன் மன்னரிடம் இதே 1. காலாழ். களின் நரியடும் கண்அஞ்சா வேல்ஆழ் முகத்த களிறு.' -குறள், 500.