பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 செழியன் துறவு கருத்தைத்தான் நானும் தெரிவித்தேன். செழியன் கூறிய வார்த்தைகள் நமக்குமட்டுமா? சோழனுக்கும் அச் சொற்கள் உரியவைதாமே? சோழ மன்னன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி சாதாரண மானவனா? இ. பொ : சரி சரி! அவனையும் புகழத்தொடங்கி விட்டீரா? அவன் பெரியவன் ஆனால் என்ன செய்ய வேண்டும் என்கிறீர்? வி. கோ : ஏன் இச் சொற்களைக் கேட்டும் அவனே பேசாமல் இருக்கிறான்? மலைநாட்டிலிருக்கும் நம்மைக்காட்டிலும் சோழன் எளிதாகப் போர் தொடுக்கலாமல்லவா? இருந்தும், அவன் ஒன்றுஞ் செய்யவில்லை என்றால், காரணம் ஏதாவது இருக்கு மல்லவா? ஆராயாமல் நாம். - இ. பொ : அமைச்சரே, சோழன் கோழையாயிருந்தால் நாமும் சும்மா இருந்துவிடுவதா? அப்படித் தான் அந்தச் சோழன் என்ன பெரிய வீரன்! அவன் பெயர்தான் ஒரு முழுநீளம் இருக்கிறது. நம்மிடம் அவன் போர் செய்தானே, வெல்ல முடிந்ததா நம்மை ; அவனைப் பெரிய வீரன் என்றா சொல்கிறீர்? வி. கோ : அரசே மன்னிக்க வேண்டும். உறுதி கூற வேண்டுவது என் கடமை. நாமாவது சோழனை வெல்ல முடிந்ததா? முடிவு தெரியாத போராகத் தானே இருந்தது அது: எண்ணித் துணிய வேண்டும் கருமத்தை துணிந்த பின் எண்ணுவது இழுக்கந் தானே தரும்: 1. குறள், 467.