பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 ன் செழியன் துறவு பீடத்திற்குச் சம உயரமான இடத்தில் அமைச்சன் வில்லவன்கோதை அமர்ந்துள்ளான்) நல் : அமைச்சரே, போர்க்களத்திலிருந்து வந்த செய்தி என் மனத்தைக் கலக்குகிறது! எப்பொழுதும் அனை வரையும் கலந்து முடிவு செய்யும் அரசர், ஏனோ இம் முறை அனைவர் பேச்சையும் தட்டிவிட்டுச் சென்றார்! அவர் புறப்படும்பொழுது என் மனம் நிலைகொள்ளாமல் தவித்தது! ஏதோ விவரிக்க முடியாத தீமை நிகழ்ந்துவிடும் போல ஒரு கவலை மனத்தைச் சூழ்ந்து வாட்டுகிறது: - கு. கிழார் : அம்மா, நல்லினி, இப்படி நீர் கவலைப்படுவது முறையா? இத்தனை நாள் உன்னை ஆண் குழந்தையாக நினைத்துத்தானே அரசர் வளர்த்தார்? போர்ப் பயிற்சி அனைத்தும் பெற்ற நீ அறிவுப் பயிற்சியும் பெற்றாயே! 'கவி பாடுவதில் சேரன் மகள் இணையற்றவள்!' என்று உலகம் கூறுவது வீனுக்கா?. - - . நல் : ஆசிரியரே, கவி பாடுவதற்கும் தந்தையாரது பிரிவால் வருந்துவதற்கும் என்ன தொடர்பு? ஏன் கல்வி வீண் என்று கூறுகிறீர்கள்? கற்றவர்கள் உற்றாரைப் பிரிந்தால் வருந்தாமல் இருப்பார்களா? கு. கிழார் : ஆம் அம்மா, உண்மையில் கற்றவர்கள் வருந்த மாட்டார்கள். உண்மைக் கவிஞன், உலகத்துன்பு இன்பங்களால் அல்லற்பட மாட்டான். கவி பாடுதல் எளிது; ஆனால், கவி மனம் பெறுதல் எளிதன்று. எனக்கும் கவலை இருக்கத்தான் செய்கிறது. ஆனால், அக் கவலை கடமையை மறக்கச் செய்யாது. காவலன் : (உள் வந்து வணங்கிவிட்டு அரசியாரே, வணக்கம்! போர்க்களத்திலிருந்து ஒர் ஒற்றன்