பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செழியன் துறவு 121 இருக்கவேண்டும். பாண்டியர்களுக்குரிய பெரிய முத்து மாலை ஒன்றை அணிந்திருக்கிறான். அவன் முகம் அறிவும், ஒளியும், எதற்கும் கவலைப்படாத பெருந்தன்மையும் நிரம்பி உளது. அவன் வலப்புறம் சமமான ஓர் இருக்கையில் புலவர் மாங்குடி மருதனார் அமர்ந்துள்ளார். அவரது வயது 50-க்கு மேலிருக்கும். அவர் உடல் சிறிது பருத்துள்ளது. அவர் செல்வ வாழ்க்கை உடையவர் என்பதைக் காட்டக்கூடிய வடிவம். இடையில் பட்டு; மேலே மடித்துப் போடப்பட்ட ஒரு சரிகைச் சாதரா; காதுகளில் குண்டலம்; நெற்றியில் பெரிய பொட்டு; புன்முறுவல் பூத்த முகம். இவ்விருவரும் அமர்ந்திருக்கும் நிலையில் காட்சி ஆரம்பிக்கிறது. உடனே கல்லாடர் வலப்புறமாக உள் நுழைகிறார்) (அரசன் எழுந்து மரியாதை செய்து) நெ. செ வருக! வருக! புலவர் மணியே, நமது வரவு நல் வரவாகுக! கல்லாடனார் என்றவுடன் மற்றைய புலவர்கள் உங்களுடன் மல்லாடுதல் பெருந்தீங்கு என நினைக்கிறார்கள். கல்லாட : நெடுஞ்செழியனே, கடல் மணலினும் பல காலம் நீ வாழ்க! நின் பகைவர் தேய்பிறை போல அழிக! வளர்பிறை போல உன் புகழ் வளர்வதாக! உன் பெயரைக் கேட்டவுடனே உன் பகைவர் குலை நடுங்குகின்றனர்! - நெ. செ : புலவரே, எல்லாம் உங்களைப் போன்ற பெரியோர்களின் ஆசியினாலேதான். கல்லாட : அரசே, நீயும் நானும் ஒவ்வொரு வகையில் பிறருக்கு அச்சத்தை விளைவிக்கிறோம். ஆனால், இதோ இங்கு வீற்றிருக்கும் மாங்குடி மருதனார் (அரரைச் சுட்டிக்காட்டி) என்னையும் உன்னையும்