பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 செழியன் துறவு நெ. செ : அப்படியா? என்ன நினைத்திருந்தீர்? என்ன கேள்வி கேட்டார் சேரர்? வீ. பா : தாம் சிறைப்பட்டதை நினைந்தும், விடுதலை பெற முடியாதது கண்டும் அவதிப்பட்டார் என்று நினைத்திருந்தேன். ஆனால், சென்ற வாரம், நீங்கள் இன்னும் மதுரையிலேதான் இருக்கிறீர்களா என்று கேட்டார். - நெ. செ யான் மதுரையில் இருக்கிறதுபற்றி அவருக்கு என்ன ? - - வீ. பா : வேறு என்ன? சேர நாட்டினர் படை எடுத்து வந்தார்களா என்று கேட்கவேண்டும். அது முடியாதபொழுது நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்று கேட்டால், அதன்மூலம் படையெடுப்புப்பற்றி அறியலாம் அல்லவா? நெ. செ நல்லது! நல்லது குறிப்பில் குறிப்பு உணர்வாரை அமைச்சராகக் கொள்ளவேண்டும் என்று நீதிநூல் கூறியது பொய்யாகுமா? நீர் என்ன விடை கூறினரீர்? வீ. பா : கூறுவது என்ன அரசே! நீங்கள் இங்கேயே அமைதியுடன் இருப்பதாகவும் எங்கும் எவ்விதச் சலனமும் இல்லை என்றும் கூறினேன். நெ. செ : ஐயோ பாவம்! அவர் மிகவும் ஏமாற்றம் உற்றிருப்பாரே! - வி. பா : நாம் பெற்ற வெற்றியையும் யான் கூறக் கேட்டு இடிந்தே போய்விட்டார்! நெ. செ : எந்த வெற்றியைக் கூறுகிறீர்? வீ. பா : ஏன்? சென்ற வாரம் பெற்ற வெற்றியைத் தான் கூறுகிறேன். வேள் எவ்வியின் மிழலைக் கூற்றமும், முத்துாற்றுக் கூற்றமும் சாதாரணமான கோட்டை களா? எத்தகைய கடும்போர் செய்து அவற்றைப்