பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 செழியன் துறவு போரிலும் பின்வாங்கமாட்டார்கள். ஆனால், வலுச்சண்டையை அவர்கள் விரும்பவில்லை. நெ. செ : அப்படியானால், தற்காப்புக்கு அல்லாமல் வேறு காரணங்கொண்டு போர் செய்யக்கூடாது என்பதுதான் உங்கள் கருத்தா? - வீ. பா : அரசே, கவிஞரும் அறிஞரும் பலர் இருக்க, என் கருத்து என்று ஒன்றைக் கூற நான் யார்? நெ. செ : மாங்குடி மருதனாரே, உங்களது கருத்து என்னவோ? அரசன் தற்காப்பு ஒன்றுக்காகவே போர் செய்வது என்றால், அவன் சாதாரணமான மனிதனிலும் வேறுபட்டவன் அல்லனே? மா. ம : பாண்டியர் தோன்றலே, அமைச்சர் கூறுவதில் ஆழமான உண்மை இருப்பதாகவே நான் நினைக்கிறேன். நெ. செ : சரி, கல்லாடனாரே, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? - கல்லாட : அரசே, உங்கள் கருத்தே என் கருத்தும் ஆகும். - தன் அரசு சிறியது என்ற எண்ணத்தால் தூண்டப் பெற்று, மேலும் மேலும்போர் செய்து தனது அரசைப் பெருக்குபவனே நான் விரும்பும் அரசன். நெ. செ : நல்லது! நல்லது! அழகாகக் கூறினர்கள்! என் உடம்பில் உயிர் இருக்கும் வரையில் போர் செய்தல் ஒன்றையே நான் விரும்புகிறேன். (நிறுத்தி ஒவ்வொரு சொல்லாக போர். வெற்றி! ஆ! எவ்வளவு இனிய செயல்கள்! ‘. . . . . . . கால வணங்கி அரசே, வாழ்க! சேரநாட்டிலிருந்து ஒர் ஒற்றன் வந்துள்ளான். - - . நெ. செ. உடனே வரச்சொல். இங்கு ஒருவரும் வாராதபடி பார்த்துக்கொள்.