பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 ல் செழியன் துறவு (சேரன் பெண் உடையுடன் வெளியே சென்று விடுகிறான்) அங்கம்-II காட்சி-2 (அதே சிறைக்கூடம். அந்தக் காவலன் உலவுகிறான். திடீரென்று நெடுஞ்செழியன் அவன் முன்னே தோன்று கிறான்) சி. கா : மன்னர் மன்னரே, வணக்கம்! நெ. செ : காவல, சிறையில் அரசர் நன்றாய் இருக்கிறாரா? சி. கா : அரசரே, இரவு நேரங்களில் ஓயாது விம்மலும் அழுகையும் கேட்கின்றன. உள்ளே சென்றால் சுவர்ப் - பக்கம் திரும்பிக் கொள்கிறார். நெ. செ சரி; கதவைத் திறந்துவிட்டு நீ வெளியில் சென்று இரு (சிறைக் கதவைக் காவலன் திறக்க, பாண்டியன் உள் செல்கிறான்) நெ. செ : சேர மன்னரே, இதோ நெடுஞ்செழியன் உங்களைக் காண வந்துள்ளேன். உங்களை நன்கு கவனித்துக்கொள்கிறார்களா? (வியப்பு, ஏமாற்றம், கோபம் கலந்த முகம், குரலுடன் ஆ! இது யார்? சேரர் எங்கே? - நல் : அரசரே, மன்னிக்க வேண்டுகிறேன். நான் உங்கள் - அடைக்கலம். என்னைக் காப்பது உங்கள் கடன். நெ. செ : நீ யார்? சேரர் எங்கே தப்பிப்போய் விட்டார்! நல் : அரசரே, ஆண் வேடம் தரித்திருப்பதால் என்னைத் - தெரியவில்லையா? நெ. செ : ஆ! சேரநாட்டுப் புலவரா? ஏன் இந்த வேடம்? சேரர் உங்களை ஏமாற்றி உள்ளே இருத்திவிட்டுப் போய்விட்டாரா? அடே, யார் அங்கே?