பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செழியன் துறவு 139 நல் : அரசரே, யாரையும் அழைக்க வேண்டா. உங்களிடம் பேச வேண்டிய செய்திகள் உள. காவலன் உள்ளே வருகிறான்) சி. கா : மன்னர் மன்னரே, ஆணைக்குக் காத்திருக்கிறேன். நெ. செ : சரி, நீ வெளியே சென்று காத்திரு. யாரையும் நல் : உள்ளே வர அனுமதிக்காதே. (சேவகன் வெளியே செல்லுகிறான்) செழிய மன்னரே, நான் ஒற்று வந்தவள் அல்லள் என்பதை முதலில் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டுகிறேன். - : நெ. செ : பின்னர் நீ யார்? செய்த காரியத்திற்கு என்ன நல் : நெ. நல் நெ. நல் : தண்டனை என்பது தெரியுமா? தெரியும். நன்றாகத் தெரியும்! உங்கள் கையால் எந்தத் தண்டனையையும் ஏற்க இந்த அடிமை எப்பொழுதும் காத்துக்கொண்டிருக்கிறேன். e செ வேண்மாள், உன் அழகு என் மனத்தில் கலவரத்தை உண்டாக்குகிறது. ஆனால், நீ செய்த இந்த அடாத செயலுக்குரிய தண்டனையை நீ அறிவாயா? - அரசரே, நான் வாராவிடினும் நீங்கள் சேரரை என்றாவது ஒரு நாள் விடுதலை செய்துதானே இருப்பீர்கள்? - - செ : அப்படியே இருப்பினும் என்ன? நானாக விடுதலை செய்வதைவிட்டு, அவர் தப்பிப் போய் விட்டார் என்று உலகம் அறிந்தால், என் மானம் என்ன ஆகும்? - . அரசரே, என் சொற்களை முதலில் கேட்டருளுங்கள். நெ. செ : என்ன சொல்ல விரும்புகிறாய்?