பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செழியன் துறவு 157 துாது : சோழர் படை தயாராய் இருக்கிறது. எந்த இடத்திற்கு வரவேண்டும் என்று நினைக்கிறீர்கள்? இ. பொ தலையாலங்கானமே போருக்குத் தகுந்த இடம் * என்று முடிவு செய்துள்ளேன். அந்தக் கோட்டை பற்றுதற்கு எளிதானது. - . தூது : அப்படியே செய்துவிடலாம். இன்னும் வேறு துணைவர் உண்டா என்பதை அறிய விரும்புகிறேன். இ. பொ : உண்டு. நீவிர் வந்துசேருமுன்னரே அனைத்தும் தயார் செய்துவிட்டேன். தூது : யார் யார் துணை என்பதை அறியலாமா? இ. பொ : நாம் இருவர் அல்லாமல், ஐவர் உளர். திதியன், எழினி, எருமையூரன், இருங்கோ வேண்மான், பொருநன் என்ற இந்த ஐவரும் நாம் கூறும் இடத்திற்கு வருவர். தூது நல்லது அரசரே, வருகிற முழுமதியன்று காலை பகலவன் உதயஞ் செய்து பத்து நாழிகை ஆனவுடன் சோழர் படை தலையாலங்கானத்தில் காத்து நிற்கும். இ. பொ : படைக்கு யார் தலைமை வகித்துவரப் போகிறார்? - தூது . ஏன்? சோழரே தலைமை தாங்கி வருவார். அவர் படை இதுவரை காணாத பெரும்படையாய் இருக்கும். : இ. பொ : மிகவும் நல்லது: சோழருக்கு என் அன்பையும் நன்றியையும் தெரிவியும். r - தூதுவன் செல்கிறான். மற்றோர் அறையில் வில்லவன் கோதையும் நல்லினியும்) - நல் : அமைச்சரே, உங்களை ஒன்று கேட்கலாமா? வி. கோ : அரசியீர், நீங்கள் கேட்பதற்கு என்ன தடை?