பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 செழியன் துறவு நெ. செ : என்ன துணிவு இவர்கட்கு! நம்மிடம் இருக்கும் நால்வகைப் படையின் அளவும் தன்மையும் இவர்கள் அறியார்களா? - வீ. பா : இருந்தும் நீங்கள் வயதால் இளையவர் என்ற எண்ணத்தால் இவர்கள் துணிந்தார்களாம். நெ. செ : (வீரச்சிரிப்புடன்) முட்டாள்கள்! பாம்பையும் புலியையும் குட்டி என்று நினைத்து எதிரே வரும் எலிகளும் மான்களும் அல்லவா இவர்கள்? வீ. பா : அரசே, இது நெடுநாட் போராக நீடிக்கலாம் என்று நினைக்கிறேன். நெ. செ. அது தவறு. இந்த எழுவரையும் நாளைப் பொழுது சாய்வதன்முன் தோல்வியுறச் செய்து, இவர்கள் مئی முரசத்தையும் கொடியையும் யான் கவர்ந்துகொள்ள வில்லையானால்.... > * (அடாணா) “என்னிழல் வாழ்நர் சென்னிழல் காணாது 'கொடியன்எம் இறை எனக் கண்ணிர் பரப்பிக் குடிபழி தூற்றுங் கோலேன் ஆகுக' வீ. பா : ஆ! அரசே, ஈதென்ன வஞ்சினம்? ஏன்? நெ. செ : 'ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி மாங்குடி மருதன் தலைவ னாக உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பின் புலவர் பாடாது வரைகளின் நிலவரை ! புரப்போர் புன்கண் தீர -- இரப்போர்க் கீயா இன்மையான் உறவே p? - பார்ப்போம் இவர்கள் வலிமையை! 12 - புறம். 72 -