பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செழியன் துறவு 165 மா. மரு : அரசே, இத்தகைய கடுமையான வஞ்சினம் செய்தோரை இதுவரை யான் கண்டதுமில்லை கேட்டதுமில்லை. வீ. பா : அரசே, நமது படைகட்கு இது மிகவும் உற்சாகம் ஊட்டுவதாகும். அவர்கட்கு உடனே இதனை அறிவிக்குமாறு காவலரை ஏவிவிடுகிறேன். நெ. செ வீரபாண்டியரே, எனது தேர் சித்தமாய் இருக்கிறதா? வீ. பா : வாள் மங்கலம், குடை மங்கலம் முதலியன செய்து அவை புறப்பட்டாயிற்று. நெ. செ சரி, நாமும் புறப்படலாம். - அங்கம்-III காட்சி-1 இடம் : தலையாலங்கானப் போர்க்களம். பாண்டிப் படைகள் முன்னர் நின்று பாண்டியன் பேசுகிறான். போர்க்களம் என்பதை அறிவிக்கக் கூடிய சாதனங்களும் திறந்த வெளியைக் காட்டும் திரைச் சிலை முதலியவைகளும் காட்சியளிக்கின்றன) - வீரர்கள் : வாழ்க! வாழ்க! நெடுஞ்செழியர் வாழ்க! வெற்றி நமதே! நெ. செ. வீரர்களே, தாய் நாட்டைக் காப்பதற்காகவே இந்தப் போரைச் செய்கிறோம் என்பது உங்களுக்குத் தெரியுமல்லவா? வீரர்கள் : தெரியும் தெரியும்!! - - நெ. செ : நாமாக யார்மேலும் பகைகொள்ளவில்லை. வீரர்கள் : இல்லை! இல்லை! - நெ. செ : சேரமான் இரும்பொறையை நாம் கருணை யினால் விடுதலை செய்தோம் அல்லவா? வீரர்கள் ஆம் ஆம்!