பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 செழியன் துறவு நெ. செ : நன்றி மறப்பது தமிழர் மரபாகுமா? வீரர்கள் : ஆகாது! - நெ. செ நன்றி மறப்பவர் எந்தக் கதியை அடைவர்? வீரர்கள் : போரில் தோல்வியும் இறந்தால் நரகமும் அடைவர். . நெ. செ நியாயமற்ற முறையில் எழுவர் சேர்ந்து ஒருவன்மேல் படை எடுத்துள்ளனர். என்றாலும், இவர்களை வென்று தீர்ப்பதாக வஞ்சினம் கூறியுள்ளோம். - வீரர்கள் : தெரியும்! தெரியும்! நெ. செ : அந்த வஞ்சினம் பொய்க்காமல் காப்பது உங்கள் கடமையல்லவா? - வீரர்கள் : ஆம்! ஆம்! வாழ்க செழிய மன்னர்! வஞ்சினம் பொய்க்க விடமாட்டோம்: தலையைக் கொடுத் தாகிலும் தாய் நாட்டைக் காப்போம்! நெ. செ : இனி நீங்கள் சென்று போர் செய்யலாம். செல்க! பகைவரை அழிக்க உடனே செல்க! வீரர்கள் : வஞ்சிக்கும் வஞ்சியானை விடமாட்டோம்! - (அதே போர்க்களம். போர்க்கள ஒசை மிகுதிப்பட்டுக் குறைகிறது. சேரனும் சோழனும் முன்னரும், சிற்றரசர் ஐவர் பின்னரும் நிற்கின்றனர்) சேரன் : சோழ மன்னரே, நம் படைகள் தள்ளாடுவதைக் கண்டால் மனம் கலங்குகிறதே! . . சோழ என்ன புதுமை! இப்படியா பாண்டியப்படை மேலேறி வரும்? பேய்கள்போல அல்லவா வீரர் முன்னேறுகின்றனர்? . சேர : இந்த முறை மிகவும் கடுமையாகச் சண்டை செய்கின்றனர்.