பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செழியன் துறவு 173 琶0円。 լIIT, செ ஆனால், அறிவின்வழி நின்று கண்ட இந்த உண்மையை மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. அவளை நினைக்குந்தோறும் தோன்றும் வருத்தம், அவளைக் கொன்றவர்மேல் கோபமாகவே மாறுகிறது. மரு : அவர்களைக் கொன்றுவிட்டால் உங்கள் காதலி வந்துவிடப் போகிறாளா? செ : அவள் வரமாட்டாள். ஆனால், பழி வாங்கிய ஆறுதல் என் மனத்துயரைச் சற்று மாற்றும் என்றே எண்ணுகிறேன். - . மரு : பழிவாங்குவது உண்மையான ஆறுதல் ஆகுமா? . செ : இப்போதைக்குச் சேரனைக் கொன்றால்தான் ஆறுதல் கிடைக்கும். . மரு . ஆனால், ஒன்று கூற விரும்புகிறேன். . செ அஞ்சாமல் எதனையும் நீங்கள் கூறலாமே! . மரு : நீங்கள் சேரனைப் பழிவாங்க வேண்டுமானால், எவ்வாறு அதனைச் செய்ய உத்தேசம்: . செ . ஏன்? போரிடுதலேதான் வழி. இருமுறை அவன் வலுவிற் போருக்கு வந்ததுபோல நாம் ஒரு முறை ஏன் செல்லக் கூடாது? மரு : தனிப்பட்ட ஒரு நெடுஞ்செழியர், தனிப்பட்ட ஒரு சேரனைப் பழிவாங்க வேண்டும். அவ்வளவு . தானே? o, - - செ : ஆம்! அதுதான். மரு அதற்கு வழி தமிழ் மக்கள் பதினாயிரக் கணக்கில் பலி இடப்படுதலா? - - செ : நீங்கள் கூறுவது ஒன்றும் விளங்கவில்லையே!