பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செழியன் துறவு 175 மா. மரு : அரசே, மன்னித்தருள்க! உங்கள் துயரை விட அவர்கள் துயரமே பெரிது. நெடுஞ்செழியர் தமக்காக வாழும் சிறு பகுதியில் நல்லினி இன்றியமையாதவள். ஆனால், பெரிய அரசராகிய உங்கள் வாழ்க்கை, மக்களுக்கு அல்லவா உரிமை? பிறர் பொருட்டு வாழும் அரச வாழ்க்கைக்கும், தன் பொருட்டு வாழும் தனி வாழ்க்கைக்கும் தொடர்பு படுத்த வேண்டா. நெ. செ : இஃது உண்மை! ஆனால், என் துயரைவிட அவர்கள் துயரம் பெரிதாவது எவ்வாறு? மா. மரு : அரசராகிய உங்கள் வாழ்க்கையிலும் செழியர் is] [T. வாழ்க்கை சிறியது. அதில் உரிமை உடையவள் நல்லினி. ஆனால், தனிப்பட்ட வீரர்களுடைய வாழ்க்கையில்-அவர்களுடைய மனைவியர் வாழ்க்கையில்-அனைத்து உரிமையும் ஒருவர்க்கு ஒருவர்தாமே? காதலனை இழந்த ஒருத்திக்கு உலகம் முழுவதும் இழந்த துயரம் அல்லவா ஏற்படுகிறது: காதலியை இழந்த அரசனுக்குக் கடமை ஒன்று இருக்கிறது. அதற்காகவேனும் அவன் உயிர்வாழ்ந்தே தீரல் வேண்டும். ஆனால், காதலனை இழந்த வீரன் மனைவிக்கு உயிர் வாழ என்ன பற்றுக்கோடு இருக்கிறது? ஒன்றும் இல்லையன்றோ? எனவே, அவர்கள் துயரம் அதிகம் என்று கூறினேன். செ : உண்மைதான் என்றாலும், வீரரை மணந்த பெண்கள் தம் காதலர் போர்க்களத்தில் இறந்தால் பெருமகிழ்ச்சியன்றோ அடைதல்வேண்டும்? மரு அவ்வாறாயின், நல்லினி ஏன் அவ்வாறு நினைக்கவில்லை? உங்களைக் காக்கத்தானே அவள் உயிரை விட்டாள்? - நெ. செ : அதனால் என்ன?