பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 செழியன் துறவு கைகளே இன்று உன்னுடன் வந்து சேருமாறும் உதவட்டும்! இதோ வந்தேன்! (குறுங்கோழியூர்க்கிழார் உள்ளே நுழைந்து அரசன் நச்சுக் கிண்ணத்தைத் தட்டிவிடுகிறார்) குறு. கிழார் : இரும்பொறையீர், என்ன செயல் செய்யத் துணிந்தீர்! பேடிகள் செய்யும் செயலைச் சேரமன்னர் செய்வதா? இரும்பொறை நின்ற இடத்திலேயே தலையைக் குனிந்துகொண்டு நிற்கிறான்) அடா, யார் அங்கே? காவல! (காவலன் உள்ளே வருகிறான்) காவலன் : புலவர் பெருமானே. ஆணை என்ன? குறு. கிழார் : அமைச்சரை விரைவில் அழைத்துவா! காவலன் : நல்லது! குறு. கிழார் : அரசே இந்தச் செயல் செய்ய ஏன் துணிந்தீர்கள்? நண்பராகிய நீங்களா இவ்வாறு செய்வது? (அமைச்சன் வில்லவன் கோதை உள்ளே நுழைகிறான்) - வருக அமைச்சரே, சரியான நேரத்திலேதான் வந்தீர்கள்! - வி. கோ : புலவர்பெருமானிர், அவசரமாக அழைத்ததாகக் காவலன் கூறினான். சரியான நேரம் என்றீர்களே! ஏன்? அரசர் ஏன் இவ்வளவு கவலை தோய்ந்த முகத்துடன் இருக்கிறார்? குறு. கிழார் : இன்னும் சில வினாடிகள் கழித்து யான் உள்ளே வந்திருப்பின் நம் அரசரைக் கண்டிருக்க இயலாது. அவர் நஞ்சுண்ண முயல்கையில் உள்