பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செழியன் துறவு 179 நுழைந்த யான் தட்டிவிட்டேன் அந்த நச்சுக் கிண்ணத்தை! வி. கோ : அரசே, இஃது என்ன? புலவர் கூறுவது உண்மையா? - இ. பொ : ஆம்! வாழ்க்கையில் வெறுப்புக்குக் காரணம் 'மகளைக் கொன்ற பாதகன் என்றும், மானம் இழந்த மன்னவன்' என்றும் உலகம் கூறுவதைக் கேட்க என் மனம் பொறாமையே! எனவே, இதற்கு ஒரு முடிவு காண முற்பட்டேன். இதில் தவறு என்ன? வி. கோ : அரசே, நீங்கள் நஞ்சு உண்டு இருந்திருப்பின் பழி பின்னும் அதிகரிக்கும் என்பதை அறியவில்லையா? இ. பொ : பழி அதிகரித்திருக்கலாம். ஆனால், நான் அதை இருந்து கேட்கப் போவதில்லையல்லவா? குறு. கிழார் : நம் காதில் விழாமல் இருப்பது ஒன்றுதானா பெரிது! அவ்வாறானால், அரண்மனையின் உள்ளேயே இருந்துவிடலாமே! இ. பொ : இப்போது அந்த மன அமைதியும் இல்லாத படி செய்துவிட்டீர்கள்! இனி என்ன செய்தால் என் மனம் அமைதி அடையும்? மீட்டும் போர் புரிந்து அந்தப் பாண்டியனை ஒழித்தால், ஒரு வேளை இழந்த என் மகளைப்பற்றிய துயரத்தைக்கூட ஒருவாறு மறக்க இயலும். வி. கோ : இன்னுங்கூட அந்தப் பாழும் போர் பற்றிய யோசனைதானா? அமைதியாக ஆட்சி நடத்தினால், நாளாவட்டத்தில் இப் பழி மறைந்து விடும். (காவலன் உள் நுழைகிறான்) காவலன் : பெருமானிர், பாண்டி நாட்டுத் தலைமை ஒற்றர் வந்துள்ளார். - இ. பொ : உடனே வரச் சொல்.