பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 € செழியன் துறவு இன்னும் போர்புரியும் எண்ணத்துடனேதான் உள்ளானா? சே. து : அரசே, உண்மை இருப்பின் போர்க் களத்தில் சந்திக்க வேண்டும்! ஏன் வீணான அவதூறு? நெ. செ : உம் அரசன் அறிவை இழப்பினும், நாம் போர் செய்யக் கருதவில்லை என்று கூறும். சே. து : பாண்டி வேந்தரே, நாளைப் பதினைந்தாம் நாள் மீண்டும் தலையாலங்கானத்தில் எம் படை உங்களைச் சந்திக்கும்! சென்று வருகிறேன். அங்கம்-III - - காட்சி-6 (பாண்டியன் தலையாலங்கானத்தில் தங்கி உள்ளான். அங்கு உள்ள அரண்மனையில் ஓர் அறை. வெளியே தூரத்தில் போர்க்கள ஆரவாரம் கேட்கிறது. செழியன் கவலை தோய்ந்த முகத்துடன் அமர்ந்திருக்கிறான். அமைச்சன் வீரபாண்டி அண்மையில் நின்றுகொண்டிருக் கையில் காட்சி ஆரம்பிக்கிறது) வீ. பா : அரசே, சேரர் படையின் முழக்கத்தைக் கேட்டீர்களா? நெ. செ : (வருத்தமான குரலில் ஏன்? நன்றாகக் கேட்கிறது: வீ. பா : உடனே போருக்கு எழாமல் இப்படி இருந்தால் நாடு என்ன ஆவது? - நெ. செ அமைச்சரே, தீர ஆராய்ந்துதான் இந்த முடிவுக்கு வந்துள்ளேன். போர் செய்வதாக எள்ளளவும் எண்ணமில்லை. - வி. பா : அரசே, இஃதென்ன காலம்! அப்படியானால் செருக்கடைந்த சேரன் பாண்டி நாட்டைக் கைப் பற்ற விட்டுவிட்டு நாம் பேதைகள்போல இருந்து