பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செழியன் துறவு 9 191 நெ. செ : சேர மன்னரே, இரத்த வெறி இன்னும் தணியவில்லையா உமக்கு! இ. பொ : ஆ! நெடுஞ்செழியனா? என்ன இறுமாப்பு உனக்கு படைகள் இல்லாமலே எம்மை வென்றுவிடலாம் என்று எண்ணமா? - நெ. செ: சேரரே, வெற்றியையே இதுவரையிற் பாராததால் அதன்மேல் உமக்கு இவ்வளவு ஆசை. ஆனால், ஓயாது வெற்றிபெற்ற நான் அதன்மேல் வெறுப் படைந்துவிட்டேன். இ. பொ : இம் முறை தோல்வியின் சுவையை அனுபவித்துப் பார்க்க எண்ணமா? நெ. செ : (சிரிப்புடன்) இரண்டுமே எனக்கு ஒன்றுதான். இ. பொ: அவ்வளவு ஞானம் கைவந்துவிட்டால் அரசாட்சி எதற்காக? - நெ. செ ஆம்! அதனையும் துறக்கத்தான் போகிறேன். இ. பொ : ஆ! என்ன கூறுகிறாய்? உண்மையாகவா? செழியன்தானா பேசுவது? - நெ. செ ஆம்: தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்-நானேதான் பேசுகிறேன். வேண்டேன் புகழ் வேண்டேன் செல்வம்! வேண்டேன் அரசு! இ. பொ : ஏன்? - நெ. செ : ஏனா? உம் மகள் நல்லினிதான் எனக்கு. இந்த அறிவைப் புகட்டினாள். எம் புலவர் பெருந்தகை மாங்குடி மருதனார் இதனை வளர்த்தார். இ. பொ : செழியா, என்ன! போருக்கு அஞ்சிவிட்டாயா?