பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 புனிதவதி தனகோ : உண்மைதான், வணிகர்கட்கு வேண்டும் பண்புகள் அனைத்தும் அவனிடம் இருக்கின்றன. ஆனால், புனிதவதியை மனைவியாகப் பெறுதற்குரிய தகுதி இருக்கிறதா என்றுதான் சிந்திக்கிறேன். கோடீ : அஃதென்ன, அப்படிக் கூறுகிறீர்கள்? ஏன் அவன் புனிதவதிக்கு ஏற்ற மணாளன் ஆகமாட்டான்? புனிதவதியுடைய தந்தையார் தனதத்தர் இப்படி ஒரு மருமகன் கிடைத்ததற்காக ஒரே மகிழ்ச்சிக் கடலில் திளைக்கிறார்: தனகோ : கோடீசுவரரே, இவற்றையெல்லாம் யான் அறியாமல் இல்லை. ஆனால், புனிதவதி இதனால் எல்லாம் மகிழ்கிறாளா என்பதைக் கவனிக்க வேண்டாவா? அவள் முகத்தைக் கவனித்தீரா? கோடி : ஆம், நீங்கள் சொல்லிய பிறகு உண்மை விளங்குகிறது. அவளுடைய புறக்கண் இங்குள்ளன வற்றைப் பார்ப்பதுபோல இருப்பினும், அகக்கண் எங்கோ சென்று நிலைத்துவிட்டது? ஒருவேளை இந்தத் திருமணத்தில் அவளுக்கு விருப்பம் இல்லையோ! - தனகேள் : எந்தத் திருமணத்திலும் அவளுக்கு விருப்பம் இராது. நம்மைப்போலத் திருமணஞ்செய்துகொண்டு குடும்ப விருத்தி செய்து வர்ழப் பிறந்தவளல்லள் புனிதவதி. காட்சி 2 (பரமதத்தன் வீடு: அடியார் ஒருவர், புனிதவதியார்) அடியார் : (கோலை ஊன்றி வரும் ஓசையுடன்) ஹர ஹர நமப் பார்வதி பதே! ஹர ஹர மகாதேவா! தாயே, மிக்க பசியால் வாடுகிறேன்! ஏதேனும் ஆகாரம்