பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புனிதவதி 9 197 கிடைத்தால் இப் பசிப்பிணியைப் போக்கிக்கொண்டு இறைவன் தியானத்தில் அமரலாம். - புனிதவதி : வருக வருக! சுவாமி, விடையவன் தன் அடியாரே, பெறலரிய விருந்தானால் பேறு இதன்மேல் யாது? உள்ளே வருக! அடி : தாயே, உன் மனம்போல வாழ்வு பெறுவாயாக! புனித : பெரியீர், சோறுமட்டுந்தான் ஆயிற்று. கறியமுது முதலியன சித்தமாகவில்லை. - அடி : தாயே, பசிப்பிணி அண்டும்பொழுது எதையாவது போட்டு அத் தீயைத் தணிக்க வேண்டும் என்பது தவிர, இது அது என்ற பாகுபாடு எனக்கில்லை அம்மா. புனித : நல்லது சுவாமி! இந்தப் பரிகலத்தினருகில் அமருங்கள். நீங்கள் வந்த நேரத்தில் என் கணவர் கடையிலிருந்து அனுப்பிய இரண்டு மாங்கனிகள் இருக்கின்றன. இந்தத் தயிர்ச் சோற்றை இம் மாங்கனியுடன் புசித்துக் களைப்பாறுங்கள். அடி : தாயே, எனது மூப்பால் பொறுத்தற்கியலாத பசியைப் போக்க நினைந்த நீ, நீலமணி மிடற்று ஒருவன் போல என்றும் வாழ்வாயாக! காட்சி 3 (பரமதத்தன் வீடு: பரமதத்தன், புனிதவதியார்) பரம : ஆஹா புனிதவதி, இன்று உன் சமையல் மிகுந்த ருசியுடன் இருக்கிறது. தனதத்த செட்டியார் மகள் எவ்வளவு அரிய கைத்திறமையுடையவள் என்பதைக் காண்கிறேன். ஒ! இதென்ன மாங்கனி: புனித : நீங்கள் கடையிலிருந்து அனுப்பியதுதான்.