பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 புனிதவதி இவ்வாறு கணவனைப் பிரிந்த மகளை வைத்துக் கொண்டு நான் என்ன செய்வது? அவளை எப்படியாவது அவள் கணவனிடம் சேர்ப்பது உங்கள் பொறுப்பு. இனி அவள் என்னுடைய மகள் அல்லள்; உங்கள் மகளே. தனகோ : இதுபற்றிய கவலை உமக்கு வேண்டா, யான் விரைவில் அவளை அழைத்துச் சென்று, பரமதத்தனிடம் சேர்க்கிறேன். காட்சி 5 (மதுரை மாநகரில் பரமதத்தன் வீடு: பரமதத்தன், தனகோடி செட்டியார், புனிதவதி, இளம் புனிதவதி, பரமதத்தன் 2ஆம் U町L0、 மனைவி, உறவினர் முதலானோர்.)

ஐயா, மறுபடியும் ஒருமுறை இவரை என்னுடைய

மனைவி என்று கூறாதீர்கள். அது பெரிய பாவம் ! இதோ என் மனைவியையும் குழந்தையையும் இவரை வணங்கச் செய்து விட்டுப் பிறகு பேசுகிறேன். குழந்தை புனிதவதி, இவரை வணங்கம்மா. நமது குலதெய்வம் இவர். தனகோ என்ன பர்மதத்தரே, உமக்கு அறிவு குழம்பி பரம விட்டதா? மனைவியை விழுந்து வணங்கினர்? ஏன் என்று கேட்டால், அவள் தெய்வம் என்கிறீரே!

ஐயா, முதலில் இவரை மனைவி என்று

நினைந்துத்தான் வாழ்ந்தேன். ஆனால், இவர் இறைவன் திருவருள் பெற்ற பெரியவர் என்பதை நேரே கண்டவுடன் இவரை விட்டு நீங்கினேன். மேலும் யான் மறுமணஞ் செய்துகொண்டு பெற்ற இப் பெண் குழந்தைக்கும் இவருடைய பெயராகிய புனிதவதி என்ற புண்ணியத் திருநாமத்தையே வைத்தேன். நீங்களும் இவரை விழுந்து வணங்குங்கள்.