பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 ல் புனிதவதி இவர் போவதற்குள் இவரது ஆசியைப் பெற்றுக் கொள். பிறகு பேசிக்கொள்ளலாம். காட்சி 6 (மதுரையில் பரமதத்தன் வீடு: இளம்புனிதவதி, பரமதத்தன்.) புனித. 2: அப்பா, பெரியம்மாளைப்பற்றிச் சொல்ல வேண்டும் என்று, நான் எத்தனை முறை கேட்டுவிட்டேன்? யான் பெரியவளானவுடன் கூறுவதாக இதுவரை கூறி வந்தீர்கள். இன்று எனக்குப் பதினெட்டாம் வயது முடிகிறதே! இன்றுவரை அவர்களைப்பற்றி அறிய வேண்டும் என்ற ஆசை தளரவே இல்லை. பரம : குழந்தை, நீ கூறுவது நியாயந்தான். ஆனால், இனிமேல் அவரைப் பெரியம்மாள் என்று வழங்காதே. காரைக்கால் அம்மையார்' என்று கூறு -2վLDԼDfT. புனித. 2 : ஏன் அப்பா எப்படி இருந்தாலும் அவர் என்னுடைய பெரிய தாயாரல்லவா? அவ்வாறு கூறுவதில் தவறு என்ன? பரம : குழந்தை, நீ அவ்வாறு கூறும்பொழுதெல்லாம் என்னை வாள் கொண்டு பிளப்பதுபோலத் தோன்றுகிறது! புனித 2 : ஏன் அப்பா அப்படி? பரம : அம்மா, மனிதன் அறியாமல் சில சமயங்களில் பிழை செய்ய நேரிடுகிறது. ஆனால், பிழையை அறிந்த பிறகு மறுபடியும் அதனைச் செய்ய அறிவுடையவன் துணிய மாட்டான். காரைக்கால் அம்மையாரை யான் இன்னார் என்று அறியாத பொழுது மணந்துகொண்டு வாழ்ந்தது உண்மைதான். ஆனால்,