பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புனிதவதி 205 அவருடைய உண்மை நிலை தெரிந்த பிறகு பழைய உறவுபற்றி நினைக்கவும் என் மனம் நடுங்குகிறது! புனித 2 : அதனால், நான் ஏன் அப்பா அவரைப் பெரிய அம்மாள் என்று கூறக்கூடாது? பரம : நீ அவ்வாறு கூறும்பொழுதெல்லாம் முன்னர் யான் அவரை நினைத்திருந்த உறவு முறை நினைவிற்கு வருகிறது. உடனே அச்சம் தோன்றுகிறது! என் கண்கண்ட தெய்வமாகிய அவரை இனி நீ முறை வைத்து அழையாதே அம்மா. புனித 2 : சரி அப்பா. ஆனால், இன்று அவருடைய வடிவம் முதலியன கனவு போல எனக்குத் தோன்றுகின்றன. அப்பா, எப்போதுமே அவர் இறைவனிடத்தில் இவ்வளவு அன்பு பூண்டிருந்தாரா? பரம ஆமம்மா. அவர் பாடிய பாட்டைக் கேள். (பாட்டு) 'பிறந்து மொழிபயின்ற பின்னெல்லாம் காதல் சிறந்துநின் சேவடியே சேர்ந்தேன்-நிறந்திகழும் மைஞ்ஞான்ற கண்டத்து வானோர் பெருமானே ! எஞ்ஞான்று தீர்ப்பது இடர் ? - 'ஒன்றே நினைந்திருந்தேன் ஒன்றே துணிந்தெழுந்தேன் ஒன்றேனன் உள்ளத்தின் உள்ளடைத்தேன்-ஒன்றேகாண் கங்கையான் திங்கள் கதிர்முடியான் பொங்கொளிசேர் அங்கையாற்கு ஆளாம் அது." புனித. 2 : அப்பா, என்ன அரிய வாழ்க்கை என்ன அரிய குறிக்கோள்: அப்பா, அவர் பேய் வடிவு கொண்ட - - பின் என்ன செய்தார்? பரம : இறைவனையே வேண்டிப் பெற்ற வடிவமாகலின் நேரே கைலைமலை சென்று அவனைக் காண