பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புனிதவதி 6 207 புனித. 2 : ா! அப்பா, பெரியோர் உள்ளம் இருந்தவாறு த ஆஹ LIIȚtm என்னே! அவர் பார்ப்பதற்கு எவ்வாறு இருந்தார் அப்பா! - அவரே தாம் பாடிய திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகத்தில் தம் வடிவை விவரிக்கின்றார். இதோ கேள்: (பாடுகிறான்) 'கொங்கை திரங்கி நரம்பெ ழுந்து குண்டுகண் வெண்பல் குழிவ யிற்று, பங்கி சிவந்திரு பற்கள் நீண்டு பரடுயர் நீள்கனைக் காலோர் பெண்பேய், தங்கி யலறி யுலறு காட்டில் தாழ்சடை எட்டுத் திசையும் வீசி அங்கம் குளிர்ந்தனல் ஆடு மெங்கள் அப்பற் கிடந்திரு ஆலங் காடே." புனித. 2 . ஏன் அப்பா அம்மையார் இப்படிப்பட்ட பேய் வடிவு எடுத்துக்கொள்ளவேண்டும்? பரம : கள்வர் முதலிய கயவர்கள் நடமாடும் உலகில் அழகிய பெண் வடிவுடன் அவர் நெடுந்தொலை சென்றிருக்க முடியாதல்லவா? - புனித 2 : இறைவன் கைலையிலேதான் தங்கியுள்ளான் என்றா அம்மையாார் கருதினார்? பரம ; இல்லை. இறைவன் அனைத்தையும் கடந்து உருவமற்று இருப்பவன் என்பது அவருக்கு நன்கு தெரியும். 3. 'வானத்தான் என்பாரும் என்க; மற்று உம்பர்கோன் தானத்தான் என்பாரும் தான்என்க' என்று அவரே பாடியுள்ளார்.