பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருள் ஒளி நாடக பாத்திரங்கள் 1. அபிராமி பட்டர் 4. கடவூர்ப் பட்டர் 2. நடராஜ பட்டர் 5. சரபோஜி மன்னர் 3. அமுதகடேச பட்டர் 6. அமைச்சர் காட்சி 1 (திருக்கடவூர்க் கோவிலின் மண்டபம்: நடராசபட்டர், அமுதகடேச பட்டர்.) நட அமுதகடேச பட்டரே, கேட்டீரா அதிசயத்தை? அமு : என்ன ஐயா, நடராஜ பட்டரே! என்ன அதிசயத்தைக் கண்டுவிட்டீர்? நட : அப்படிக் கேளுமையா! நம்ம அபிராமி பட்டனைத் தெரியுமோ உமக்கு? , அ.மு : யார்? கடவூர்ப் பட்டரின் மகன் அபிராமி தானே? தெரியாமல் என்ன? நல்ல பையன். அவனுக்கென்ன? நட நன்றாகக் கண்டுவிட்டீர்! அவனும் நல்ல பையன்; நீரும் மிகவும் நல்லவர்தான்! அமு : ஏன் ஐயா இவ்வளவு கோபம்? அவன் என்ன அப்படிச் செய்துவிட்டான்? தமிழ், சமஸ்கிருதம், சங்கீதம் மூன்றிலும் அவனுக்கு நிகர் யாரும் இல்லையே நம் ஊரில்!.