பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2怡 ● அருள் ஒளி சர : அபிராமி பட்டரே, அபிராமி பட்டரே, என்ன ஆராய்ந்து கொண்டிருக்கிறீர்? அபி ஆராய்ச்சியாவது?-அழகிய இடை, அதிலே சாத்திய குளிபடும் பட்டு, பிச்சி மொய்த்த கன்னங்கரிய குழல், கண் மூன்று. என்ன அழகு! காணக் கண் கோடி வேண்டும்! நட டேய் அபிராமி, என்னடா உளறுகிறாய்? மகாராஜா கேட்டதை விட்டுவிட்டு என்னவோ உளறுகிறாயே? மது மயக்கம் அதிகமோ? சர : என்ன நடராச பட்டரே, மது உண்பாரா இவர்? நட : வாம மார்க்கத்தவன்தானே இவன்? மது மாமிசம் உண்பான்; இப்பொழுது மது மயக்கத்தில் தான் எந்தப் பெண்ணையோ வர்ணிக்கிறான்! - அமை : அரசே, நடராச பட்டர் சொல்வதை முழுவதும் நம்புவதற்கில்லை. இவரை வாம மார்க்கத்தவர் என்று சொல்லமுடியாது. இவர் சித்தி பெற்ற புருஷர் என்றே நினைக்கவேண்டியிருக்கிறது. நட : இல்லை, அரசே! ஊரில் யாரை வேண்டுமானாலும் விசாரித்துப் பாருங்கள், மது மாமிசம் உண்டுவிட்டுப் பித்தேறித் திரிபவன் இவன் என்ற உண்மை விளங்கும். என்ன கெங்கு பட்டரே, நமக்குத் தெரியாதா அபிராமி பட்டனை? மஹாராஜா, இதோ கெங்கு பட்டரிடம் வேண்டுமானாலும் கேட்டுக் கொள்ளுங்கள். s - சர : என்னுடைய மனம் இன்னும் தெளிவடையவில்லை. இதோ பேசுகிறார்; கேட்போம். அபி : தாயே! எட்டுத்திக்கிலும் உள்ள லோகங்களைச் சுற்றி வரும் சூரிய சந்திரர்களைக் காட்டிலும் ஒளி