பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருள் ஒளி 219 கடவூ என்னவோ அப்பா, அந்த அபிராமிதான் உன்னைக் காப்பாற்றவேண்டும்! நாளைக்கு அரசர் திரும்பி வரும்பொழுது, என்ன தண்டனை அளிப்பாரோ! அபி : இருக்கட்டும் அப்பா, அபிராமியின் திருவருள் கைவிட்டுவிடாது. நான் இங்கேயே இருந்து இன்றிரவு தேவியை நினைத்து வணங்குகிறேன். அவளுடைய திருவருளுக்கு முன்னே, அரசரும் அவருடைய கோபமும் என்ன செய்யமுடியும்? প্ৰ கோயில் மணிச் சத்தம் கேட்கிறது) கடவூ இதோ மாலைக்கால பூசை மணி அடிக்கிறது; நான் சென்று வருகிறேன். . . - (மணிச்சத்தம் அதிகரிக்கிறது) அபி : தேவி, உன்னுடைய முகவிலாச இன்பத்தை அநுபவித்துக் கொண்டிருந்த எனக்கு இது என்ன சோதனை? - நன்றே வருகினும் தீதே வருகினும் நான் அறிவது ஒன்றேயும் இல்லை பாடுகிறார்) . ‘உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம், உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம் போது, மலர்க்கமலை துதிக்கின்ற மென்கொடி, மென்கடிக் குங்கும் தோயமென்ன விதிக்கின்ற மேனி அபிராமி என்றன் விழித்துணையே. அன்றே தடுத்துஎன்னை ஆண்டுகொண் டாய்;கொண்டது அல்லவென்கை