பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 அருள் ஒளி நன்றே உனக்கு இனி ? நானென் செயினும் நடுக்கடலுள் சென்றே விழினும் கரையேற் . றுகைநின் திருவுளமே; ஒன்றே! பலஉருவே! அரு வே! என் உமையவளே ! பாலினும் சொல் இனி யாய் பணி - மாமலர்ப் பாதம்வைக்க மாலினும் தேவர் வணங்கநின் . றோன்கொன்றை வார்சடையின் மேலினும் கீழ்நின்று வேதங்கள் பாடுமெய்ப் பீடமொரு நாலினுஞ் சாலநன் றோஅடி யேன்முடை நாய்த்தலையே? நாயே னையும் இங் கொருபொரு ளாக நயந்துவந்து நீயே எனை ஆண்டு கொண்டனை, நின்றனை உள்ளவண்ணம் பேயேன் அறியும் அறிவுதந் தாய்; என்ன பேறுபெற்றேன் ! தாயே! மலைமக ளே செங்கண் மால்திருத் தங்கைச்சியே! விழிக்கே அருளுண்டு அபிராம வல்லிக்கு வேதஞ்சொன்ன வழிக்கே வழிபட நெஞ்சுண்டு எமக்கவ் வழிகிடக்கப் பழிக்கே சுழன்றுவெம் பாவங்க ளேசெய்து பாழ்நரகக் குழிக்கே அழுந்தும் கயவர்தம் மோடென்ன கூட்டினியே!